உரிய ஆவணங்கள் இன்றி இயங்கிய வாகனங்களுக்கு ரூ.80 ஆயிரம் அபராதம்

வேலூரில் உரிய ஆவணங்கள் இன்றி இயங்கிய வாகனங்களுக்கு ரூ.80 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

Update: 2021-08-07 14:04 GMT
வேலூர்
வேலூரில் உரிய ஆவணங்கள் இன்றி இயங்கிய வாகனங்களுக்கு ரூ. 80 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

வாகன சோதனை
 வேலூர் வட்டார போக்குவரத்து அலுவலகமும், போக்குவரத்து காவல்துறையும் இணைந்து கலெக்டர் குமாரவேல்பாண்டியன் உத்தரவின்பேரில் வாகன சோதனை நடத்தியது.
மோட்டார் வாகன ஆய்வாளர்கள் கருணாநிதி, சக்திவேல், போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் சீனிவாசன் மற்றும் போலீசார் வேலூர் பழைய பஸ் நிலைய பகுதியில் இதில் ஈடுபட்டனர். 

அப்போது அந்த வழியாக வந்த ஆட்டோக்கள், லாரிகள், சரக்கு வாகனங்கள் உள்ளிட்ட வாகனங்களை மறித்து சோதனை நடத்தி டிரைவர்களிடம் ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டது. முடிவில் 12 வாகனங்களுக்கு சோதனை அறிக்கை வழங்கினர்.

வாகனங்கள் பறிமுதல்

இதுகுறித்து வட்டார போக்குவரத்து அலுவலர் செந்தில்வேலன் கூறுகையில் ‘கலெக்டர் உத்தரவின் பேரில் இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் உரிய ஆவணங்கள் இல்லாமல் இயங்கிய 2 லாரிகள், ஒரு சரக்கு ஆட்டோ பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் வரி செலுத்தாமல் இருந்த ஒரு பொக்லைன் எந்திரத்துக்கு ரூ.12 ஆயிரத்து 500 வரி நிர்ணயிக்கப்பட்டு வசூல் செய்யப்பட்டது.
மேலும் இதையடுத்து சாலை வரி, நுழைவு வரி செலுத்தாத வாகனங்களுக்கும், உரிய ஆவணங்கள் இன்றி இயங்கிய வாகனங்களுக்கும் ரூ.80 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. அதில் சில வாகனங்களுக்கு உடனடியாக ரூ.10 ஆயிரம் அபராதம் வசூலிக்கப்பட்டது.
மேலும் சில வாகனங்களுக்கு ரூ.8 ஆயிரத்து 500 வரி நிர்ணயம் செய்யப்பட்டது. இந்த சோதனை தொடர்ந்து நடைபெறும் என்றார்.

மேலும் செய்திகள்