புதிதாக 1,805 பேருக்கு வைரஸ் தொற்று: கர்நாடகத்தில் கொரோனா பாதிப்பு திடீர் அதிகரிப்பு
கர்நாடகத்தில் கொரோனா பாதிப்பு திடீரென அதிகரித்து உள்ளது.
பெங்களூரு: கர்நாடகத்தில் கொரோனா பாதிப்பு திடீரென அதிகரித்து உள்ளது.
கர்நாடத்தில் நேற்றைய பாதிப்பு குறித்து சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியதாவது:-
36 பேர் உயிரிழந்தனர்
கர்நாடகத்தில் நேற்று ஒரு லட்சத்து 62 ஆயிரத்து 338 பரிசோதனைகள் செய்யப்பட்டன. இதில் 1,805 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதனால் மாநிலத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 29 லட்சத்து 15 ஆயிரத்து 317 ஆக அதிகரித்துள்ளது. வைரஸ் தொற்றுக்கு மேலும் 36 பேர் உயிரிழந்தனர்.
இதனால் கொரோனா பாதிப்பால் இறந்தவர்களின் எண்ணிக்கை 36 ஆயிரத்து 741 ஆக உயர்ந்துள்ளது. மருத்துவ சிகிச்சையில் 24 ஆயிரத்து 328 பேர் உள்ளனர். ஒரே நாளில் 1,854 பேர் குணம் அடைந்து வீடு திரும்பினர்.
இதனால் குணம் அடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 28 லட்சத்து 54 ஆயிரத்து 222 ஆக அதிகரித்துள்ளது. புதிதாக பாதிக்கப்பட்டோரில் பெங்களூரு நகரில் 441 பேர், சிக்கமகளூருவில் 69 பேர், தட்சிண கன்னடாவில் 411 போ், ஹாசனில் 103 பேர், குடகில் 79 பேர், மைசூருவில் 90 பேர், உடுப்பியில் 153 பேர், சிவமொக்காவில் 70 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது.
பாதிப்பு அதிகரிப்பு
கொரோனா பாதிப்பு ஏற்பட்டு சிகிச்சை பலனின்றி பெங்களூரு நகரில் 7 பேர், தட்சிண கன்னடாவில் 3 பேர், கோலாரில் 5 பேர், மைசூருவில் 4 பேர், மண்டியாவில் 3 பேர், சித்ரதுர்கா, சிக்பள்ளாப்பூர், உடுப்பியில் தலா 2 பேர் உள்பட மொத்தம் 36 பேர் உயிரிழந்தனர்.
இவ்வாறு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
கர்நாடகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரிக்க தொடங்கி உள்ளது. இதனால் சுகாதாரத்துறையினர் அதிர்ச்சி அடைந்து உள்ளனர்.