கோவிலுக்கு சென்றவர் தண்ணீரில் மூழ்கி இறந்த பரிதாபம்

கோவிலுக்கு சென்றவர் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தார்.

Update: 2021-08-06 21:09 GMT
அரியலூர்:
அரியலூர் மாவட்டம் வானதிராயன்பட்டினம் ராம்நகரை சேர்ந்தவர் பாலமுருகன் (வயது 48). இவர் விவசாய கூலி வேலை செய்து வருகிறார். இந்த நிலையில் நேற்று தன்னுடைய குடும்பத்தோடு ஸ்ரீரங்கம் கோவிலுக்கு சென்றார். பின்னர் ஊருக்கு செல்லும் போது கம்பரசம்பேட்டை அருகில் உள்ள அய்யாளம்மன் படித்துறை காவிரி ஆற்றில் குளிப்பதற்காக சென்றுள்ளனர். பாலமுருகன் மட்டும் ஆற்றில் இறங்கி குளித்து கொண்டிருந்தார். அப்போது திடீரென வலிப்பு வந்து அவர் நீரில் மூழ்கி பலியானார். 
இதுபற்றி தகவல் அறிந்த ஜீயபுரம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பாலமுருகனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்