சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபருக்கு 10 ஆண்டுகள் சிறை

சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து திருவாரூர் மகிளா நீதிமன்றம் உத்தரவிட்டது.

Update: 2021-08-06 18:29 GMT
திருவாரூர்:
சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து திருவாரூர் மகிளா நீதிமன்றம் உத்தரவிட்டது.
சிறுமிக்கு பாலியல் தொல்லை
திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் சேகரை பகுதியை சேர்ந்தவர் மூர்த்தி. இவருடைய மகன் விஜய்(வயது 22). இவர், அதே பகுதியை சேர்ந்த 14 வயது சிறுமிக்கு கடந்த 2019-ம் ஆண்டு மே மாதம் 27-ந் தேதி  பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். 
இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் திருவாரூர் அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விஜய்யை கைது செய்தனர்.
10 ஆண்டுகள் சிறை
இந்த வழக்கு விசாரணை திருவாரூர் மகிளா நீதிமன்றத்தில் நடந்து வந்தது. விசாரணை முடிவடைந்த நிலையில் நீதிபதி சுந்தரராஜன் நேற்று தீர்ப்பு வழங்கினார். இந்த தீர்ப்பில், சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த விஜய்க்கு 10 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து உத்தரவிட்டார். 
இதனையடுத்து விஜய்யை மன்னார்குடி கிளை சிறையில் போலீசார் அடைத்தனர். இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் மல்லிகா ஆஜரானார்.

மேலும் செய்திகள்