வாலிபருக்கு கத்திக்குத்து; 4 பேர் கைது

திருப்பத்தூர் அருகே வாலிபருக்கு கத்திக்குத்து விழுந்தது. இது தொடர்பாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2021-08-06 17:54 GMT
திருப்பத்தூர்,

திருப்பத்தூர் அருகே தேவரம்பூரை சேர்ந்த நாகராஜன் மகன் வெங்கடேஸ்வரன்(வயது 31). இவருக்கும் கீழச்சிவல்பட்டி அருகே உள்ள பகுதியை சேர்ந்த 41 வயது பெண்ணுக்கும் 5 ஆண்டாக பழக்கம் இருந்து வந்தது. இந்த நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு வெங்கடேஸ்வரன் அந்த பெண் வீட்டுக்கு சென்று தகராறு செய்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து அந்த பெண்ணின் மகள், தனது நண்பரான காரைக்குடி பாரதிநகரை சேர்ந்த கார்த்திக்ராஜாவிடம்(25) தகராறு குறித்து தெரிவித்தார்.
இந்த நிைலயில், சிவகங்கை சாலையில், தேவரம்பூர் விலக்கு ரோட்டில் வெங்கடேஸ்வரன் நின்றிருந்தார். அங்கு வந்த கார்த்திக்ராஜா அவரை கத்தியால் குத்தினார்.திருப்பத்தூர் காளையப்ப நகரைச்சேர்ந்த சுதன்ராஜ் (24), காரைக்குடியை சேர்ந்த மூர்த்தி, ரகேஸ், அந்த பெண், அவரது மகள் ஆகியோர் கையால் தாக்கியதாக தெரிகிறது. இதில் காயம் அடைந்த அவர் திருப்பத்தூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு முதலுதவி சிகிச்சைக்கு பிறகு சிவகங்கை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு உள்ளார். இதுகுறித்து திருக்கோஷ்டியூர் சப்-இன்ஸ்பெக்டர் பெரியசாமி வழக்குப்பதிவு செய்து விசாரித்து கார்த்திக்ராஜா, சுதன்ராஜ், தாய்-மகள் உள்ளிட்ட 4 பேரையும் கைது செய்தனர். மூர்த்தி, ரகேஸ் ஆகியோரை தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்