மருதமலை பேரூர் உள்பட 50 கோவில்களில் தமிழில் அர்ச்சனை
கோவையில் முதற்கட்டமாக மருதமலை, பேரூர் உள்பட 50 கோவில் களில் தமிழில் அர்ச்சனை செய்யப்பட்டது. இதனால் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
கோவை
கோவையில் முதற்கட்டமாக மருதமலை, பேரூர் உள்பட 50 கோவில் களில் தமிழில் அர்ச்சனை செய்யப்பட்டது. இதனால் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
தமிழில் அர்ச்சனை
கோவில்களில் தமிழில் அர்ச்சனை நடைபெறும் என்று தமிழக அரசு அறிவித்து இருந்தது. இதனைத்தொடர்ந்து சென்னை கபாலீஸ்வரர் கோவிலில் இந்த திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது.
இதையடுத்து மாநிலம் முழுவதும் அரசின் கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களில் தமிழில் அர்ச்சனை செய்வது நடைமுறைக்கு வந்து உள்ளது.
கோவை மாவட்டத்தில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட் டில் உள்ள 290 கோவில்களில் முதற்கட்டமாக 50 கோவில்களில் தமிழில் அர்ச்சனை செய்யப்படுகிறது.
இதுகுறித்து இந்த சமய அறநிலையத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:-
50 கோவில்கள்
கோவை மாவட்டத்தில் மருதமலை சுப்ரமணிய சுவாமி கோவில், பேரூர் பட்டீசுவரர் கோவில், ஆனைமலை மாசாணியம்மன் கோவில், கோவை தண்டுமாரியம்மன், கோனியம்மன், லட்சுமி நரசிம்மர், உள்பட 50 கோவில்களில் தமிழில் அர்ச்சனை செய்வது முதல் தொடங்கப்பட்டு உள்ளது.
பக்தர்கள் தங்களது விருப்பத்தின் பேரில் தமிழ் அல்லது சமஸ்கிருதத்தில் அர்ச்சனை செய்து கொள்ளலாம். இதற்காக அந்தந்த கோவில்களில் தமிழில் அர்ச்சனை செய்யப்படும் என்ற அறிவிப்பு பலகை வைக்கப்பட்டு உள்ளது.
படிப்படியாக அனைத்து கோவில்களிலும் தமிழில் அர்ச்சனை திட்டம் அமல்படுத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார்.