வத்தல்மலை அருகே கிணற்றில் மூழ்கி சிறுவன் சாவு

வத்தல்மலை அருகே கிணற்றில் மூழ்கி சிறுவன் இறந்தான்.

Update: 2021-08-06 15:32 GMT
பொம்மிடி:
தர்மபுரி மாவட்டம் வத்தல்மலை அருகே உள்ள ஒன்றிக்காடு கிராமத்தை சேர்ந்தவர் காமராஜ். விவசாயி. இவருடைய மகன் ஸ்ரீகாந்த் (வயது 9). அங்குள்ள அரசு பள்ளியில் 4-ம் வகுப்பு படித்து வந்தான். சிறுவன் நேற்று நண்பர்களுடன் அவர்களுக்கு சொந்தமான கிணற்றில் மீன்பிடிக்க சென்றான். அப்போது கிணற்றில் தவறி விழுந்த ஸ்ரீகாந்த் தண்ணீரில் மூழ்கி இறந்தான். இதுகுறித்து பொம்மிடி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து போலீசார் விரைந்து சென்று சிறுவனின் உடலை கைப்பற்றி தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். கிணற்றில் மூழ்கி சிறுவன் இறந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்