போக்குவரத்து நெருக்கடியில் சிக்கி தவிக்கும் மக்கள்
சாத்தூரில் போக்குவரத்து நெருக்கடியை சரி செய்ய ஆக்கிரமிப்பை அகற்ற ேவண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.
சாத்தூர்,
சாத்தூரில் போக்குவரத்து நெருக்கடியை சரி செய்ய ஆக்கிரமிப்பை அகற்ற ேவண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.
போக்குவரத்து மாற்றம்
சாத்தூரில் இருந்து இருக்கன்குடி நென்மேனி, கோசுகுண்டு, பந்தல்குடி, அருப்புக்கோட்டை, நாகலாபுரம், விளாத்திகுளம், புதூர் ஆகிய பகுதிகளுக்கு செல்லும் பஸ்கள் ரெயில்வே பீடர் ரோடு வழியாக சென்று வந்தது.
இந்தநிலையில் ரெயில்வே பீடர் ரோட்டில் பாதாள சாக்கடை திட்ட பணிகள் நடைபெற்று வருவதால் இந்த வழியாக செல்லும் பஸ்கள் மற்றும் வாகனங்களை வடக்கு ரத வீதி வழியாக போக்குவரத்து மாற்றி திருப்பிவிடப்பட்டது.
ஆக்கிரமிப்பு
இதனால் வடக்கு ரத வீதியில் ரோட்டின் இரு ஓரங்களில் இரு சக்கர வாகனம் மற்றும் ஆட்டோக்கள் நிறுத்தப்பட்டு ஆக்கிரப்பு செய்யப்பட்டுள்ளது. இதனால் கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது. பஸ்கள் சென்று திரும்பும் பொழுது பொதுமக்களுக்கு பெரும் இடையூறு ஏற்படுகிறது. போக்குவரத்து நெருக்கடியால் வாகன ஓட்டிகள் பெரிதும் சிரமத்திற்குள்ளாகின்றனர்.
எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சாலையின் இரு ஓரங்களிலும் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி போக்குவரத்திற்கு சீராக வழி ஏற்படுத்தி தருமாறு பொதுமக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.