மதுரையில் நேற்று 26 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. மதுரையில் இதுவரை நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் 73 ஆயிரத்து 615 ஆக உயர்ந்துள்ளது. இதுபோல், நேற்று 34 பேர் குணம் அடைந்து வீடு திரும்பினர். இவர்களில் 15 பேர் நகர் பகுதியைச் சேர்ந்தவர்கள். நேற்றுடன் மதுரையில், 72 ஆயிரத்து 223 பேர் குணம் அடைந்து வீட்டிற்கு சென்றிருக்கிறார்கள். சிகிச்சையில் இருப்பவர்களின் எண்ணிக்கையும் 246 ஆக குறைந்துள்ளது. மதுரையில் கொரோனா பாதிப்பால் நேற்று அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த 50 வயது ஆண் ஒருவர் உயிரிழந்தார். இதன் மூலம் இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,146 ஆக உயர்ந்துள்ளது.