கல்வித்துறை அலுவலகம் முன் கம்யூனிஸ்டு மற்றும் விடுதலை சிறுத்தைகள்

கம்யூனிஸ்டு, விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.

Update: 2021-08-05 19:38 GMT
புதுச்சேரி, ஆக.6-
கம்யூனிஸ்டு, விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.
இலவச கல்வி
ஆதிதிராவிடர் மாணவர் களுக்கு ஆரம்ப கல்வி முதல் ஆராய்ச்சி    கல்வி   வரை இலவச கல்விக்கான கட்டண திட்டத்தை செயல்படுத்த வேண்டும். 75 சதவீத கல்வி கட்டணத்தை 2 தவணைகளில் வசூலிக்காத தனியார் கல்வி நிறுவனங்கள் மீது நடவடிக்கை   எடுக்கவேண்டும். புதுவைக்கென தனி கல்வி வாரியம் அமைக்க வேண்டும் என்பன போன்ற கோரிக்கைகளை கம்யூனிஸ்டு, விடுதலை சிறுத்தைகள்    கட்சியினர் வலியுறுத்தி வருகின்றனர்.
அவர்கள் தங்கள் கோரிக்கையை வலியுறுத்தி கல்வித்துறை இயக்குனர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்போவதாக அறிவித்து இருந்தனர். இதற்காக அவர்கள் நெல்லித்தோப்பு சிக்னல் அருகே ஒன்று கூடினார்கள்.
ஊர்வலம்-ஆர்ப்பாட்டம்
பின்னர் அங்கிருந்து அவர்கள்    ஊர்வலமாக  வந்து கல்வித்துறை அலுவலகம் முன்    கோரிக்கைகளை வலியுறுத்தி   ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்துக்கு இந்திய கம்யூனிஸ்டு மாநில செயலாளர் சலீம் தலைமை தாங்கினார். முன்னாள் எம்.எல்.ஏ. நாரா.கலைநாதன், இந்திய கம்யூனிஸ்டு    நிர்வாகிகள் கீதநாதன், சேதுசெல்வம், தினேஷ் பொன்னையா, துரை செல்வம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு செயலாளர் ராஜாங்கம்,     நிர்வாகிகள் முருகன், பெருமாள், கம்யூனிஸ்டு (எம்.எல்.) செயலாளர் சோ.பாலசுப்ரமணியன்,    விடுதலை சிறுத்தைகள் கட்சி முதன்மை செயலாளர் தேவ.பொழிலன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
_-------___

மேலும் செய்திகள்