காவிரி ஆற்றில் மூழ்கி தொழிலாளி சாவு

கொக்கராயன்பேட்டை அருகே காவிரி ஆற்றில் மூழ்கி தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார்.

Update: 2021-08-05 18:42 GMT
பள்ளிபாளையம்,

எருமப்பட்டி அருகே உள்ள பொட்டிரெட்டிபட்டி பகுதியை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியம் (வயது 46). இவர் அங்குள்ள செங்கல் சூளையில் தொழிலாளியாக வேலை செய்து வந்தார். இவருடைய மனைவி செல்வி. இவர்களுக்கு 2 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். 

இந்தநிலையில் ஆடிப்பெருக்கையொட்டி பாலசுப்பிரமணியம் குடும்பத்துடன் பொட்டிரெட்டிபட்டியில் இருந்து கொக்கராயன்பேட்டை அருகே மணக்காடு பகுதியில் உள்ள உறவினர் வீட்டிற்கு வந்தனர். இதையடுத்து 5 பேரும் அங்குள்ள காவிரி ஆற்றுக்கு குளிக்க சென்றனர். அப்போது ஆற்றில் குளித்து கொண்டிருந்த பாலசுப்ரமணியம் திடீரென தண்ணீரில் மூழ்கினார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த மனைவி, மகள்கள், மகன் ஆகியோர் தண்ணீரில் மூழ்கியவரை தேடினர். ஆனால் கண்டுபிடிக்க முடியவில்லை. 

இந்தநிலையில் நேற்று காலை பாலசுப்பிரமணியின் உடல் அதே பகுதியில் கரை ஒதுங்கியது. இதுகுறித்து செல்வி மொளசி போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சதாசிவம் வழக்குப்பதிவு செய்து உடலை கைப்பற்றி திருச்செங்கோடு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தார். தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

மேலும் செய்திகள்