உலோக தடுப்புகள் திருட்டு
உலோக தடுப்புகள் திருடியவர்களை போலீசார் தேடிவருகின்றனர்.
கமுதி,
கமுதி அருகே கீழ்குடி-வாலசுப்பிரமணியபுரம் செல்லும் சாலையில் ஓடை மீது பாலம் ஒன்று உள்ளது.இதில் செல்லும் வாகனங்களின் பாதுகாப்பான பயணத்திற்காக உலோக தடுப்புகள் வைக்கப்பட்டு உள்ளன. இதில் உள்ள 100 மீட்டர் நீளமுள்ள உலோகத் தடுப்பான்களை மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளனர். இதுகுறித்து பெருநாழி போலீசார் வழக்குப்பதிவு செய்து தடுப்பான்களை திருடிய மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.