வாணியம்பாடியில் இருந்து ஆந்திராவுக்கு லாரியில் கடத்த முயன்ற 5 டன் ரேஷன் அரிசி பறிமுதல்
லாரியில் கடத்த முயன்ற 5 டன் ரேஷன் அரிசி பறிமுதல்
வாணியம்பாடி
திருப்பத்தூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிபிசக்கரவர்த்தி உத்தரவின்பேரில், மாவட்டம் முழுவதும் ரேஷன் அரிசி கடத்தலைத் தடுக்க சிறப்பு தனிப்படை போலீசார் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் மாவட்டம் முழுவதும் ரோந்து சென்று ரேஷன் அரிசி கடத்தலை தடுக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று இரவு 8 மணி அளவில் வாணியம்பாடி காதர் பேட்டை அடுத்த நியூடெல்லி பகுதியில் இருந்து ஆந்திர மாநிலத்திற்கு கடத்திச் செல்வதற்காக ரேஷன் அரிசி மூட்டைகளை லாரியில் ஏற்றிக்கொண்டு இருப்பதாக தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் தனிப்படை போலீசார் அந்தப்பகுதிக்கு சென்று லாரியை சுற்றி வளைத்தனர்.
அப்போது அன்னு என்பவரின் கும்பல் ரேஷன் அரிசி மூட்டைகளை லாரியில் ஏற்றிக் கொண்டு இருந்தனர். அவர்கள் போலீசாரை பார்த்ததும் தப்பி ஓடி விட்டனர்.
இதனையடுத்து லாரியையும், 5 டன் அரிசியையும் பறிமுதல் செய்து வாணியம்பாடி டவுன் காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர். இதுகுறித்து டவுன் போலீசார் வழக்குப் பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.