குடியாத்தம் அருகே வீட்டில் பதுக்கி வைத்திருந்த 2 டன் ரேஷன் அரிசி பறிமுதல்

வீட்டில் பதுக்கி வைத்திருந்த 2 டன் ரேஷன் அரிசி பறிமுதல்

Update: 2021-08-05 17:18 GMT
குடியாத்தம்

குடியாத்தம் அடுத்த நத்தம் பகுதியில் ஒரு வீட்டில் ரேஷன் அரிசி பதுக்கி இருப்பதாக வேலூர் மாவட்ட கலெக்டர் குமாரவேல் பாண்டியன், மாவட்ட வழங்கல் அலுவலர் காமராஜ் ஆகியோருக்கு தகவல் கிடைத்தது. அவர்களின் உத்தரவின் பேரில் குடியாத்தம் தாசில்தார் லலிதா, வட்ட வழங்கல் அலுவலர் தேவி, துணை தாசில்தார் மகேஸ்வரி, வருவாய் ஆய்வாளர் ஜோதிராமலிங்கம் உள்ளிட்டோர் குடியாத்தம் அடுத்த நத்தம் பகவான் நகர் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் சோதனை நடத்தினர்.

அப்போது அந்த வீட்டில் 40 மூட்டைகளில் 2 டன் ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருந்தது  கண்டுபிடிக்கப்பட்டது. 40 மூட்டை ரேஷன் அரிசியை பறிமுதல் செய்து குடியாத்தம் அடுத்த பாக்கம் கிராமத்தில் உள்ள தமிழ்நாடு அரசு நுகர்பொருள் வாணிபக்கிடங்கில் ஒப்படைக்கப்பட்டது. 
ரேஷன் அரிசி மூட்டைகளை பதுக்கி வைத்திருந்த வீட்டின் உரிமையாளர் குறித்து வருவாய்த் துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். 

மேலும் செய்திகள்