தோட்ட தொழிலாளி தற்கொலை

கம்பத்தில் தோட்ட தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2021-08-05 17:11 GMT
கம்பம்: 


கம்பம் கோம்பை சாலை தெருவை சேர்ந்தவர் மாரிமுத்து. இவரது மனைவி லட்சுமி (வயது 27). தோட்ட தொழிலாளி. இவர், கடந்த 3 மாதங்களாக வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. 


இதற்கு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றும், குணமாகாததால், லட்சுமி மனமுடைந்ததாக தெரிகிறது. இந்நிலையில் நேற்று காலை வீட்டில் தனியாக இருந்த லட்சுமி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து கம்பம் வடக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இறந்த லட்சுமிக்கு 2 மகன்கள் உள்ளனர்.

மேலும் செய்திகள்