மோட்டார் சைக்கிளில் வந்து பெண்ணிடம் நகை பறிப்பு
சாயர்புரம் அருகே மோட்டார் சைக்கிளில் வந்து பெண்ணிடம் நகை பறித்துச் சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடிவருகிறார்கள்.
சாயர்புரம்:
சாயர்புரம் அருகே உள்ள நந்தகோபாலபுரத்தை சேர்ந்த அந்தோணிராஜ் மனைவி செந்தமிழ் ஜெயா அமலி (வயது 42). இவர் பெட்டிக்கடை நடத்தி வருகிறார். சம்பவத்தன்று பகலில் கடையை விட்டு வெளியே வந்து நின்றபோது மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் செந்தமிழ் ஜெயா அமலி கழுத்தில் அணிந்திருந்த 7 பவுன் தங்கச்சங்கிலியை பறித்து சென்று விட்டனர்.
இதுபற்றி சாயர்புரம் போலீசில் செந்தமிழ் ஜெயா அமலி புகார் கொடுத்தார். அதன்பேரில் சாயர்புரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் திருமலைமுருகன் வழக்குப்பதிவு செய்து மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள்.