ஒலிம்பிக்கில் வெண்கல பதக்கம்: லவ்லினாவுக்கு மு.க.ஸ்டாலின் வாழ்த்து
ஒலிம்பிக்கில் வெண்கல பதக்கம்: லவ்லினாவுக்கு மு.க.ஸ்டாலின் வாழ்த்து.
சென்னை,
ஒலிம்பிக்கில் குத்துச்சண்டை போட்டியில் வெண்கல பதக்கம் வென்று வீராங்கனை லவ்லினா போர்கோஹெய்ன் சாதனை படைத்துள்ளார். இதற்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:-
அசாம் மாநிலத்தின் சிறிய கிராமத்தில் இருந்து, அனைத்து தடைகளையும் எதிர்த்து போராடி, தன் தாய்க்கு அளித்த உறுதியை நிறைவேற்றும் வண்ணம், டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு 3-ம் பதக்கத்தை லவ்லினா போர்கோஹெய்ன் பெற்று தந்துள்ளார் என்பதை அறிந்து மகிழ்கிறேன். லவ்லினா வென்ற வெண்கல பதக்கத்தை விடவும் அவர் வாழ்க்கையே இந்தியர்கள் அனைவருக்கும் சிறந்த ஊக்கம் அளிப்பதாக உள்ளது.
இவ்வாறு அதில் கூறியுள்ளார்.