அரசு கல்லூரிகளில் பணியாற்றும் கவுரவ விரிவுரையாளர்களுக்கு ஊதிய நிலுவையை உடனே வழங்க வேண்டும்

அரசு கல்லூரிகளில் பணியாற்றும் கவுரவ விரிவுரையாளர்களுக்கு ஊதிய நிலுவையை உடனே வழங்க வேண்டும் தமிழக அரசுக்கு டாக்டர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்.

Update: 2021-08-05 11:11 GMT
சென்னை,

பா.ம.க. இளைஞரணி தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் நேற்று வெளியிட்ட ‘டுவிட்டர்‘ பதிவில் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாட்டில் உள்ள 109 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் பணியாற்றி வரும் 4 ஆயிரத்து 84 கவுரவ விரிவுரையாளர்களுக்கு ஏப்ரல் மாதம் முதல் ஊதியம் வழங்கப்படவில்லை என்று வெளியாகியுள்ள செய்திகள் மிகவும் வேதனையளிக்கின்றன. இது தவறு.

கல்லூரிகள் திறக்கப்படாததை காரணம் காட்டி ஊதியம் நிறுத்தி வைக்கப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. கல்லூரிகள் திறக்கப்படாவிட்டாலும் ஆன்லைனில் கவுரவ விரிவுரையாளர்கள் தொடர்ந்து பாடம் நடத்தி வரும் நிலையில் அதற்கான ஊதியத்தை மறுப்பது நியாயமல்ல.

கவுரவ விரிவுரையாளர்களுக்கு ஊதியம் வழங்கப்படாததால் அவர்களும், அவர்களின் குடும்பத்தினரும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களின் வாட்டத்தைப் போக்கும் வகையில் கவுரவ விரிவுரையாளர்களின் ஊதிய நிலுவையை உடனடியாக அரசு வழங்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்