தம்பியை கொலை செய்த அண்ணன் கைது

தம்பியை கொலை செய்த அண்ணன் கைது செய்யப்பட்டார்

Update: 2021-08-04 21:49 GMT
ஜெயங்கொண்டம்
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே வாரியங்காவல் கிராமம் மெயின் ரோடு தெருவைச் சேர்ந்தவர் செல்வராஜ். இவருக்கு குமார் என்கிற சிவக்குமார்(வயது 35) மற்றும் வெங்கடேசன் (24) என 2 மகன்கள் மற்றும் 2 மகள்கள். இதில் மகள்கள் இருவருக்கும் திருமணமாகி விட்டது. இளைய மகன் வெங்கடேசன் பெயிண்டர் வேலை பார்த்து வந்தார். அனைவரும் கூட்டுக் குடும்பமாக வசித்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று முன்தினம் மதியம் வெங்கடேசன் குடிபோதையில் தனது அண்ணன் சிவக்குமாரிடம் மோட்டார் சக்கிள் வாங்கி தரக் கேட்டு தகராறு செய்ததாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக அண்ணன்-தம்பிக்கிடையே கைகலப்பு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த சிவக்குமார், வெங்கடேசனை கீழே தள்ளியுள்ளார். இதில் வெங்கடேசனுக்கு பின்பக்க தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அனுமதிக்கப்பட்ட வெங்கடேசன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.  இதுதொடர்பாக ஜெயங்கொண்டம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தம்பியை கொன்றதாக அண்ணன் சிவக்குமாரை கைது செய்தனர்.

மேலும் செய்திகள்