இரு தரப்பினர் இடையே ஏற்பட்ட தகராறில் 8 பேர் மீது வழக்குப்பதிவு
இரு தரப்பினர் இடையே ஏற்பட்ட தகராறில் 8 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது
விக்கிரமங்கலம்
அரியலூர் மாவட்டம் விக்கிரமங்கலம் அருகே கணக்கம்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் சக்கரவர்த்தி (வயது 45). விவசாயி. அதே பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன் (35). விவசாயி. உறவினர்களான இவர்கள் இருவருக்கும் இடையே இடப்பிரச்சினை இருந்து வருவதாக கூறப்படுகிறது. சம்பவத்தன்று சக்கரவர்த்தி தனது வீட்டில் அருகே நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த மணிகண்டன் நிலம் சம்பந்தமாக அவரிடம் கேட்டுள்ளார். அப்போது இருவருக்கும் இடையே வாய்த் தகராறு ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த சக்கரவர்த்தியின் உறவினர்களான அழகுதுரை சரத்குமார் சரத்பாபு மற்றும் மணிகண்டனின் உறவினர்களான அண்ணாதுரை சம்பத் சாமிநாதன் ஆகியோர் அங்கு வந்தனர். அப்போது இரு தரப்பினர் இடையே வாய்த்தகராறு முற்றி ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர். இதுகுறித்து விக்கிரமங்கலம் போலீசில் இரு தரப்பினரும் கொடுத்த புகாரின்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரமேஷ் சக்கரவர்த்தி 8 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.