வாழை சாகுபடியில் ஆர்வம் காட்டும் விவசாயிகள்
தொடர் மழை எதிெராலியால் வாழைசாகுபடியில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
வத்திராயிருப்பு,
தொடர் மழை எதிெராலியால் வாழைசாகுபடியில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
வாழை சாகுபடி
வத்திராயிருப்பு, வ.புதுப்பட்டி, அர்ச்சுனாபுரம், கான்சாபுரம், அத்தி கோவில், கூமாபட்டி, கிழவன்கோவில் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் 200-க்கும் மேற்பட்ட ஏக்கரில் விவசாயிகள் வாழை சாகுபடி செய்துள்ளனர்.
இந்த பகுதியில் பெய்த தொடர் மழையின் காரணமாக கண்மாய்கள் மற்றும் நீர்நிலைகள் நிரம்பி உள்ளன. அதேபோல கிணறுகளில் போதிய தண்ணீர் இருப்பதால் தற்போது இப்பகுதியில் விவசாயிகள் வாழையை ஆர்வத்துடன் சாகுபடி செய்துள்ளனர்.
உரமிடும் பணி
தற்போது வாழைக்கு விவசாயிகள் உரமிடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:-
வத்திராயிருப்பு பகுதியில் 100-க்கும் மேற்பட்ட ஏக்கரில் வாழை பயிரிடப்பட்டு விவசாயம் செய்து வருகிறோம். கடந்த ஆண்டு பெய்த தொடர் மழையின் காரணமாகவும், இந்த ஆண்டு கோடையில் பெய்த தொடர் மழையின் காரணமாகவும் நீர்நிலைகள் மற்றும் கிணறுகளில் தண்ணீர் போதுமான அளவு இருப்பதால் தொடர்ச்சியாக இந்த ஆண்டும் தாங்கள் வாழை பயிரிடப்பட்டு விவசாய பணியினை மேற்கொண்டு உள்ளோம்.
எதிர்பார்ப்பு
இன்னும் சில மாதங்களில் வாழை பூ எடுத்து குழையிடும் பருவத்தில் இருப்பதால் தற்போது உரமிடும் பணி நடந்து வருகிறது.
தற்போது கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக வாழை இலையின் விற்பனை தங்களுக்கு போதிய வருமானத்தை ஈட்டவில்லை. இதனால் நாங்கள் வேதனையுடன் உள்ளோம். வாழைத்தார் மூலம் தாங்கள் இந்த ஆண்டு போதிய லாபம் ஈட்ட முடியும் என்ற எதிர்பார்ப்பில் உள்ளோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.