உள்ளாட்சி தேர்தல் வரைவு வாக்குச்சாவடி பட்டியல் இன்று வெளியீடு
உள்ளாட்சி தேர்தல் வரைவு வாக்குச்சாவடி பட்டியல் இன்று வெளியீடு
ராணிப்பேட்டை
ராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று (வியாழக்கிழமை) உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக வரைவு வாக்குச்சாவடி பட்டியல் வெளியிடப்படுகிறது. எனவே அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள், உள்ளாட்சி தேர்தல் வரைவு வாக்குச்சாவடி பட்டியல்கள் மீது கருத்து மற்றும் ஆட்சேபனை எதுவும் இருக்கும் பட்சத்தில் வருகிற 7-ந் தேதி காலை 11 மணிக்கு மக்கள் குறைதீர்க்கும் கூட்ட அரங்கில் நடக்கும் கருத்துக்கேட்பு கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்துக்களை தெரிவிக்கலாம். மேலும் கருத்துக்கள், ஆட்சேபனைகளை மனுக்களாகவும் அளிக்கலாம்.
இந்த தகவலை மாவட்ட கலெக்டர் கிளாட்ஸ்டன் புஷ்பராஜ் தெரிவித்தார்.