ஆதார் அட்டை எடுக்க நீண்ட வரிசையில் காத்திருந்த பொதுமக்கள்

சீர்காழி தபால் நிலையத்தில் ஆதார் அட்டை எடுக்க பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். எனவே கூடுதல் ஆதார்சேவை மையங்களை திறக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2021-08-04 18:06 GMT
சீர்காழி:
சீர்காழி தபால் நிலையத்தில் ஆதார் அட்டை எடுக்க பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். எனவே கூடுதல் ஆதார்சேவை மையங்களை திறக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஆதார் அட்டை
புதிய குடும்ப அட்டை, பாஸ்போர்ட், பள்ளிச் சான்று, வருமானச் சான்று, இறப்புச் சான்று, மோட்டார் வாகன ஓட்டுனர் உரிமம், வாரிசு சான்று, சாதி சான்று, கல்வி சான்று, கல்வி உதவித்தொகை சான்று, வருமான வரி மற்றும் அரசு சலுகைகள்  பெற வேண்டும் என்றால் கட்டாயம் ஆதார் அட்டை வேண்டும் என மத்திய, மாநில அரசுகள் அறிவித்துள்ளன.
 இந்நிலையில் சீர்காழி நகராட்சி வைத்தீஸ்வரன் கோவில் பேரூராட்சி, சீர்காழி ஊராட்சி ஒன்றியம், கொள்ளிடம் ஊராட்சி ஒன்றியம், செம்பனார்கோவில் ஊராட்சி ஒன்றியம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் சீர்காழி தலைமை தபால் நிலையம், பழைய தாசில்தார் அலுவலக வளாகம்,  சீர்காழி நகராட்சி அலுவலக வளாகம் ஆகிய 3 இடங்களில்  ஆதார் சேவை மையங்களில் ஆதார் அட்டை எடுக்க வருகின்றனர்.
காத்திருக்கும் பொதுமக்கள்
 கடந்த சில மாதங்களாக இந்த சேவை மையங்களில் இணையதள பிரச்சினையால் ஆதார் அட்டை எடுக்க முடியாமல் பொதுமக்கள் அலைக்கழிக்கப்பட்டு வருகின்றனர்.
சீர்காழி தலைமை தபால் நிலையத்தில் ஆதார் அட்டை எடுக்க அதிகாலை 4 மணி முதல் 7 மணி வரை பொதுமக்கள் வரிசையில் நின்று டோக்கன் வாங்கி செல்கின்றனர். 30 பேருக்கு மட்டுமே டோக்கன் வழங்கப்படுகிறது. ஆதார் அட்டை எடுக்க காலை முதலே பொதுமக்கள் நீண்ட வாரிசையில் காத்திருப்பதால் பல்வேறு இன்னல்களை சந்திக்கின்றனர்.. அதிகாலையிலேயே வந்து டோக்கன் வாங்க சிரமமாக இருப்பதாக பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
கூடுதல் ஆதார் சேவை மையம்
 இதுகுறித்து  பொதுமக்கள் கூறுகையில், சீர்காழி தாலுகா பகுதியில் அரசு சார்பில் 3 இடங்களில் செயல்படும் ஆதார் சேவை மையம் முறையாக செயல்படாததால் சீர்காழி பகுதி பொதுமக்கள் தினமும் அலைக்கழிக்கப்பட்டு வருகின்றனர். இதனை தவிர்க்கும் வகையில் தமிழக அரசு கூடுதலாக ஆதார் சேவை மையங்களை திறக்க வேண்டும். மேலும் ஆதார் மையங்களில் தவறுகள் நடக்காதவாறு கண்காணிக்க வேண்டும. தவறு செய்யும் பணியாளர் மீது அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

மேலும் செய்திகள்