கொரோனா தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி
பொள்ளாச்சி நகராட்சியில் சார்பில் கொரோனா தடுப்பு குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
பொள்ளாச்சி,
பொள்ளாச்சி நகராட்சியில் சார்பில் கொரோனா தடுப்பு குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
விழிப்புணர்வு நிகழ்ச்சி
தமிழகத்தில் கடந்த மே மாதத்தில் கொரோனா பாதிப்பு அதிகமாக இருந்தது. இதற்கிடையில் கடந்த 2 மாதத்தில் தினசரி தொற்று எண்ணிக்கை குறைந்து வந்தது.
இந்த நிலையில் தற்போது கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்க தொடங்கி உள்ளது. இதன் காரணமாக பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்த அரசு உத்தரவிட்டு உள்ளது.
இதை தொடர்ந்து பொள்ளாச்சி நகராட்சி சார்பில் பஸ் நிலையத்தில் பொதுமக்களுக்கு கைகளை சுத்தம் செய்வது குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கமிஷனர் தாணுமூர்த்தி தலைமை தாங்கினார். அப்போது கைகழுவுதல் குறித்து பொதுமக்களுக்கு செயல்விளக்கம் செய்து காண்பிக்கப்பட்டது.
துண்டு பிரசுரம் வினியோகம்
தொடர்ந்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் மற்றும் ஸ்டிக்கர்கள் வழங்கி விழிப்புணர் ஏற்படுத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் சுகாதார ஆய்வாளர்கள் தர்மராஜ், செந்தில்குமார், ஆறுமுகம், சிவக்குமார், ஜெயபாரதி மற்றும் பலர் கலந்துகொண்டனர்.
இதுகுறித்து நகராட்சி அதிகாரிகள் கூறுகையில், கொரோனா தடுப்பு குறித்து நகரில் உள்ள முக்கிய வீதிகளில் ஒலிப்பெருக்கி மூலம் கொரோனா தடுப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
பொதுமக்கள், வியாபாரிகள் கொரோனா பாதுகாப்பு வழிமுறைகளை கடைப்பிடித்து தொற்று பாதிப்பை முழுமையாக கட்டுப்படுத்த ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று தெரிவித்தனர்.