திருப்பூர் ஆண்டிபாளையம் பகுதியில் ஆக்கிரமிப்புகளை அகற்றிய மாநகராட்சி அதிகாரிகளை அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

திருப்பூர் ஆண்டிபாளையம் பகுதியில் ஆக்கிரமிப்புகளை அகற்றிய மாநகராட்சி அதிகாரிகளை அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2021-08-04 16:43 GMT
வீரபாண்டி:
திருப்பூர் ஆண்டிபாளையம் பகுதியில் ஆக்கிரமிப்புகளை அகற்றிய மாநகராட்சி அதிகாரிகளை அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
முற்றுகை
திருப்பூர் மங்கலம் சாலை ஆண்டிபாளையம் முதல் இடுவம்பாளையம் வரை சாலையோரம் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் நேற்று மாநகராட்சி அதிகாரிகள் ஈடுபட்டனர். காலை 10 மணி அளவில் மத்திய  போலீஸ் உதவியுடன் மாநகராட்சி அதிகாரிகள் பொக்லைன் மூலம் சாலையை ஆக்கிரமிப்பு செய்து கட்டியிருந்த சுவர்கள் கான்கிரீட் தளங்கள் மற்றும் கடைகளுக்கு முன்பாக பாதுகாப்புக்காக போடப்பட்டு இருந்த சீட் ஆகிய அனைத்தையும் இடித்துத் தரைமட்டம் செய்தனர்.
ஆண்டிபாளையம் பெட்ரோல் பங்க் அருகில் அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டிருந்தபோது அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் திடீரென்று மாநகராட்சி அதிகாரிகள் செயற்பொறியாளர் கண்ணன் மற்றும் உதவி பொறியாளர் ஹரி ஆகியோரைமுற்றுகையிட்டு  வாக்குவாத்தில் ஈடுபட்டனர். சம்பவ இடத்திற்கு வந்த மத்திய காவல் நிலைய போலீஸ் இன்ஸ்பெக்டர் பததுருநிஷா பொதுமக்களிடையே சமாதானப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டார். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
தகவல் தெரிவிக்கவில்லை
இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது:-
 ஆக்கிரமிப்பு அகற்றும் பணியில் மாநகராட்சி அதிகாரிகள் ஈடுபட வேண்டாம் என்று நாங்கள் தெரிவிக்கவில்லை முன்கூட்டியே எந்த ஒரு அறிவிப்பும் கொடுக்கப்படாமல் திடீரென்று கடைகள் முன் காங்கிரீட் தளம், மேல் ஷீட் ஆகியவற்றை இடித்து தள்ளியுள்ளனர். அதிகாரிகள் முன்கூட்டியே தகவல் தெரிவித்ததாக கடை உரிமையாளரிடம் கையெழுத்து பெற்றுக்கொண்டு பணிகளை செய்வதாக கூறியுள்ளனர். ஆனால் பல பேரிடம் இது குறித்து எந்த ஒரு தகவலும் மாநகராட்சி சார்பில் தெரிவிக்கப்படவில்லை. கடந்த 2 வருடங்களாக கொரோனா நோயின் பரவல் காரணமாக பொதுமக்கள் பலரும் பாதிக்கப்பட்டு இருக்கும் நிலையில், மாநகராட்சி அதிகாரிகள் இதுபோன்ற திடீரென்று அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபடுவதால் தொழில் செய்பவர்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். 
இவ்வாறு தெரிவித்தனர்.
அனைவருக்கும் நோட்டீஸ்
இதுகுறித்து 4-ம் மண்டல செயற்பொறியாளர் கண்ணன் கூறுகையில்  கடந்த 2 மாதங்களுக்கு முன்பாகவே அனைவருக்கும் நோட்டீஸ் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் உரிய முறையில் அவரிடம் கையெழுத்து பெற்று பணிகளை தொடங்கி உள்ளோம் என்று தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து முற்றுகையிட்ட பொதுமக்கள் இடையே அதிகாரிகள் மற்றும் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். அவரவர் கடைகள் முன்பாக உள்ள ஆக்கிரமிப்புகளை அவர்களே அகற்றிக் கொள்ள 2 நாள் அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்