தகராறின் போது தொழிலாளியின் காதை கடித்து துப்பியவர் கைது
தகராறின்போது ெநசவுத்தொழிலாளியின் காதை கடித்து துப்பியவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
ஆரணி
தகராறின்போது ெநசவுத்தொழிலாளியின் காதை கடித்து துப்பியவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
தகராறு
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியை அடுத்த எஸ்.வி.நகரம் ஊராட்சியில் மருத்துவமனை தெருவில் வசிப்பவர் சரவணன் (வயது 27), நெசவுத்தொழிலாளி. இவர் கடந்த 1-ந்தேதி வீட்டின் அருகில் நின்று கொண்டிருந்தார்.
அப்போது அதே பகுதியைச் சேர்ந்த நீலகண்டன் (40) என்பவர் குடிபோதையில் அங்கு வந்தார்.அவர், சரவணனிடம் ஏதோ பேசி தகராறு செய்துள்ளார்.
ஆத்திரம் அடைந்த நீலகண்டன் திடீரென சரவணனின் ஒரு பக்க காதின் சிறு பகுதியை கடித்து கீழே துப்பி விட்டு தப்பியோடி விட்டார். அதில் சரவணனின் காது கிழிந்து தொங்கியது. அதில் இருந்து ரத்தம் அதிகளவில் வெளியேறியது.
வலியால் துடித்த அவரை குடும்பத்தினர் மீட்டு ஆரணி அரசு மருத்துவமனையில் சிகிச்ைசக்காகச் ேசர்த்தனா்். அங்கு, அவருக்கு முதலுதவி சிகிச்ைச அளித்து, பின்னர் மேல் சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு, அவர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்.
சிறையில் அடைப்பு
இதுகுறித்து சரவணனின் தந்தை பெருமாள் ஆரணி தாலுகா போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
இதுதொடர்பாக நீலகண்டனை போலீசார் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.