வேப்பனப்பள்ளி அருகே தக்காளி செடிகளை சேதப்படுத்திய யானைகள்
வேப்பனப்பள்ளி அருகே தக்காளி செடிகளை யானைகள் செய்தன.
வேப்பனப்பள்ளி,
தமிழக எல்லையான கொங்கனப்பள்ளி வனப்பகுதியில் கடந்த 3 மாதங்களாக 20-க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் முகாமிட்டுள்ளன. இந்த யானைகள் அடிக்கடி, வனப்பகுதியை ஒட்டி உள்ள கிராமங்களுக்குள் புகுந்து விவசாய பயிர்களை சேதப்படுத்தி வருகின்றன. இந்தநிலையில் நேற்று காலை வேப்பனப்பள்ளி அருகே உள்ள பூதிமுட்லு கிராமத்துக்குள் காட்டு யானைகள் புகுந்தன. அவை வெங்கடேஷ் பாபு, லோகேஷ் ஆகியோரின் நிலத்தில் பயிரிட்டிருந்த தக்காளி செடிகளை தின்றும், கால்களால் மிதித்தும் சேதப்படுத்தின. மேலும் அவை தென்னை, பப்பாளி போன்ற மரங்களை வேரோடு பிடுங்கி நாசம் செய்தன. பின்னர் யானைகள் வனப்பகுதிக்குள் சென்று விட்டன. யானைகளின் அட்டகாசத்தால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். எனவே அவற்றை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.