கொரோனா விழிப்புணர்வு
செய்திதுறை சார்பில் கொரோனா விழிப்புணர்வு வாகனம் மூலம் மேற்கொள்ளப்பட்டது.
ராமநாதபுரம்,
ராமநாதபுரம் மாவட்டத்தில் கொரோனா விழிப்புணர்வு பட காட்சிகளை கிராமம் கிராமமாக சென்று பொதுமக்கள் மத்தியில் திரையிட்டு விழிப்புணர்வு ஏற்படுத்த செய்தி மக்கள் தொடர்பு துறையின் சார்பில் பிரசார வாகனம் தயார் செய்யப்பட்டுள்ளது.இந்த வாகனத்தின் பிரசார பணியை மாவட்ட கலெக்டர் சந்திரகலா கொடியசைத்து தொடங்கி வைத்தார்.இதில் கூடுதல் கலெக்டர் பிரவீன்குமார், மாவட்ட வருவாய் அதிகாரி மீனாட்சி கணேசன், ஆர்.டி.ஓ. சேக்மன்சூர், மக்கள் தொடர்பு அதிகாரி நவீன்பாண்டியன், உதவி அதிகாரி கயிலைசெல்வம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.