இளம்பெண் தற்கொலை

ராமநாதபுரத்தில் இளம்பெண் தற்கொலை செய்துகொண்டார்.

Update: 2021-08-04 15:41 GMT
ராமநாதபுரம், 
ராமநாதபுரம் மாடக்கொட்டான் தில்லைநாயகபுரம் பகுதியை சேர்ந்தவர் செந்தில். இவரின் மனைவி அஜிதா (வயது22). திருமணமாகி 2 ஆண்டுகளாகி உள்ள நிலையில் குழந்தை இல்லை என்று கூறப்படுகிறது. இதன்காரணமாக அஜிதா மன வேதனையில் இருந்துள்ளார். இதனால் வாழபிடிக்கவில்லை என்று அடிக்கடி பெற்றோரிடம் கூறி வந்தாராம். நேற்று முன்தினம் பெற்றோருக்கு செல்போனில் தொடர்பு கொண்ட அஜிதா மனது சரியில்லை தன்னை வந்து கூட்டிச்செல்லுமாறு கூறினாராம். இதனால் ராமநாதபுரம் யாதவர் தெருவை சேர்ந்த தந்தை கண்ணன் (50) தனது மகளின் வீட்டிற்கு சென்றபோது அங்கு அஜிதா வீட்டில் சேலையால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனால் அதிர்ச்சி அடைந்த கண்ணன் இதுகுறித்து ராமநாதபுரம் கேணிக்கரை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்