புதிய டிரான்ஸ்பார்மர்கள் அமைப்பு
பரமக்குடி பகுதியில் புதிய டிரான்ஸ்பார்மர்கள் அமைக்கப்பட்டன.
பரமக்குடி,
பரமக்குடி அருகே உள்ள நெல்மடூர் ஊராட்சி மற்றும் மேலப் பார்த்திபனூர் ஊராட்சி, மேலாய் குடி ஊராட்சி ஆகிய பகுதிகளில் குறைந்த மின் அழுத்தம் இருந்து வந்தது. இதனால் அப்பகுதி மக்கள் பிரிட்ஜ், வாஷிங் மிஷின், மிக்சி, கிரைண்டர் ஆகியவற்றை பயன்படுத்த முடியாத நிலை இருந்து வந்தது. அந்தபகுதி மக்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தினர். அதன் பயனாக தற்போது அவர்களுக்கு புதிய டிரான்ஸ்பார்மர்கள் அமைக்கப்பட்டு அதன் திறப்பு விழா நடந்தது. விழாவிற்கு ஊராட்சி தலைவர்கள் சுகன்யா சதீஷ் குமார், சண்முகவேலு, காளிமுத்தன் ஆகியோர் தலைமை தாங்கினர். மாவட்ட ஊராட்சி குழு தலைவர் திசை வீரன், முன்னாள் அமைச்சர் டாக்டர் சுந்தரராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். எம்.எல்.ஏ.க்கள் காதர் பாட்சா முத்துராமலிங்கம், முருகேசன் ஆகியோர் புதிய டிரான்ஸ் பார்மர்களை இயக்கி வைத்தனர். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட விவசாய அணி துணைச்செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, ஒன்றிய பொறுப்பாளர்கள் சந்திரசேகர், ஜெயகுமார், ஒன்றிய துணைச் செயலாளர் சந்திரன், பரமக்குடி நகர் பொறுப்பாளர் ஜீவரெத்தினம் உள்பட பலர் கலந்து கொண்டனர். பார்த்திபனூர் உதவி மின் பொறியாளர் லோகேஸ்வரன் நன்றி கூறினார்.