ஊராட்சி இடங்களை ஒப்படைக்காவிட்டால் போராட்டம்

சுருளி அருவியில் ஊராட்சிக்கு சொந்தமான இடங்களை ஒப்படைக்காவிட்டால் போராட்டம் நடைபெறும் என்று ஆலோசனை கூட்டத்தில் ஊராட்சி தலைவர்கள் ஆவேசமாக கூறிவிட்டு வெளியேறினர்.

Update: 2021-08-04 14:24 GMT
கம்பம்: 


கம்பம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தின் கீழ், வேளாண் தொடர்பான பணிகள் குறித்து ஆலோசனை கூட்டம் நடந்தது. இதற்கு வட்டார வளர்ச்சி அலுவலர் கோதண்டபாணி (கிராம ஊராட்சி) தலைமை தாங்கினார். 


கூட்டத்தில் ஊராட்சி தலைவர்கள் பொன்னுத்தாய் குணசேகரன், மொக்கப்பன், நாகமணி வெங்கடேசன் ஆகியோர் கம்பம் ஊராட்சி ஒன்றிய பயணிகள் விடுதிக்கு செல்ல வனத்துறையினர் அனுமதி மறுக்கின்றனர். இதையடுத்து அந்த இடங்கள் சுருளி அருவி புலிகள் காப்பக நிர்வாகத்தின் கீழ் வந்துவிட்டது என்று கம்பம் கிழக்கு வனச்சரகர் சுரேஷ்குமார் கூறினார்.

 அதற்கு ஊராட்சி தலைவர்கள் கடும் எதிர்ப்பை தெரிவித்தனர். பின்னர் பயணிகள் விடுதி உள்ளிட்ட ஊராட்சிகளுக்கு சொந்தமான இடங்களை மீண்டும் ஊராட்சிகளுக்கு வழங்க வேண்டும், இல்லையென்றால் போராட்டம் நடத்துவோம் என ஆவேசத்துடன் கூறிவிட்டு வெளியேறினர். 



இதனால் பரபரப்பு ஏற்பட்டது. கூட்டத்தில் தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் பிரியதர்ஷினி, கம்பம் கிழக்கு வனச்சரகர் சுரேஷ், கால்நடைத்துறை டாக்டர் செல்வம், ஊராட்சி மன்ற தலைவர்கள் சாந்தி பரமன், பொன்னுத்தாய் செல்லையா ஆகியோர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்