காயரம்பேடு கிராமத்தில் வங்கி மேலாளர் வீட்டில் நகை திருட்டு
காயரம்பேடு கிராமத்தில் வங்கி மேலாளர் வீட்டில் நகை திருடப்பட்டன.
வண்டலூர்,
செங்கல்பட்டு மாவட்டம் காயரம்பேடு அவ்வை நகர் பகுதியை சேர்ந்தவர் தினேஷ் (வயது 39). இவர் சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்.
இவரது மனைவி சென்னையில் உள்ள தனியார் வங்கியில் மேலாளராக பணிபுரிந்து வருகிறார். இவர்கள் இருவரும் நேற்று முன்தினம் காலை வழக்கம்போல் வேலைக்கு சென்றுவிட்டு மீண்டும் இரவு வீடு திரும்பினர்.
அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
பின்னர் உள்ளே சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 7 பவுன் தங்க நகை மற்றும் 300 கிராம் வெள்ளி பொருட்கள் திருட்டு போனது தெரியவந்தது. இதுகுறித்து கூடுவாஞ்சேரி போலீசில் புகார் செய்யப்பட்டது.
போலீஸ் இன்ஸ்பெக்டர் நந்தகுமார் மற்றும் போலீசார் விரைந்து சென்று அக்கம்பக்கத்தில் இருந்தவர்களிடம் விசாரித்தார். இதுகுறித்து கூடுவாஞ்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.