ராணுவத்தில் சேர இளைஞர்களுக்கு பயிற்சி

ஜவான்ஸ் அமைப்பு சார்பில் ராணுவத்தில் சேர இளைஞர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.

Update: 2021-08-03 21:18 GMT
நாகர்கோவில்:
ஜவான்ஸ் அமைப்பு சார்பில் ராணுவத்தில் சேர இளைஞர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.
இளைஞர்களுக்கு பயிற்சி
குமரி, தென்காசி, தூத்துக்குடி, நெல்லை உள்பட 17 மாவட்டங்களை சேர்ந்த இளைஞர்களுக்கு ராணுவத்தில் ஆள்சேர்ப்பு முகாம் செம்டம்பர் மாதம் 15-ந் தேதி தொடங்கி 30-ந் தேதி வரை நாகர்கோவில் அண்ணா விளையாட்டு அரங்கத்தில் நடக்கிறது. இந்த நிலையில் குமரி மாவட்டத்தில் இருந்து ராணுவத்தில் சேர விரும்பும் இளைஞர்களுக்கு தேவையான உடற்பயிற்சி, எழுத்து தேர்வு பயிற்சி உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகள் குறித்து ராணுவ வீரர்களின் அமைப்பான ஜவான்ஸ் சார்பில் அளிக்கப்பட்டு வருகிறது. இதில் கலந்துகொள்ள விருப்பும் இளைஞர்கள் மாவட்ட மகளிர் திட்ட அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது.
வெற்றி பெற முடியும்
முதல் நாள் பயிற்சியானது நேற்று முன்தினம் முளகுமூட்டில் நடந்தது. இதைத் தொடா்ந்து 2-வது நாளான நேற்று நாகர்கோவில் அண்ணா விளையாட்டு அரங்கம், மார்த்தாண்டம் மற்றும் தக்கலை ஆகிய இடங்களில் பயிற்சி நடந்தது. அண்ணா விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்ற பயிற்சியில் ஏராளமான இளைஞர்கள் கலந்து கொண்டனர். 
அவர்களுக்கு கயிறு ஏறுதல், ஓட்டம் தொடர்பான உடல் திறன் பயிற்சிகளும், தேர்வுக்கு எப்படி தயார் செய்து கொள்வது என்பது குறித்தும் பயிற்சி அளிக்கப்பட்டது. அப்போது உடலும், மனதும் திடனாக இருந்தால் தான் வெற்றி பெற முடியும் என்று ராணுவ வீரர்கள் கூறினா். 

மேலும் செய்திகள்