ஆலங்குளத்திற்கு கூடுதல் பஸ்கள் இயக்க கோரிக்கை

ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்து ஆலங்குளத்திற்கு செல்ல கூடுதல் பஸ்கள் இயக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Update: 2021-08-03 20:37 GMT
ஆலங்குளம், 
ஸ்ரீவில்லிபுத்தூர் -  ஆலங்குளத்திற்கு இடையே நாச்சியார்பட்டி, அனைத்தலைபட்டி, பி.ராமச்சந்திராபுரம், அச்சந்தவிழ்த்தான், கோடாங்கிபட்டி, பி. திருவேங்கிடபுரம், மேல பழையாபுரம் கொங்கன்குளம், அரசு சிமெண்டு ஆலை காலனி, அம்பேத்கர்நகர் ஆகிய கிராமங்கள் உள்ளன. இப்பகுதியில் விவசாயிகள் அதிகமாக உள்ளனர். இவர்கள் உற்பத்தி செய்யும் காய்கறிகளை ஸ்ரீவில்லிபுத்தூர் சந்தைக்கு கொண்டு செல்லவேண்டிய நிலையில் உள்ளனர். வேலைக்கு செல்பவர்கள், பள்ளி, கல்லூரி மாணவர்கள் என தினமும் எண்ணற்ற பேர் ஸ்ரீவில்லிபுத்தூருக்கு செல்ல வேண்டிய நிலை உள்ளது. இந்தநிலையில் ஸ்ரீவில்லிபுத்தூரிலிருந்து ஆலங்குளம் வரை கூடுதல் பஸ்கள் இல்லாததால் பொதுமக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே மேற்கண்ட வழித்தடத்தில் கூடுதலாக பஸ் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என விருதுநகர் மேற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி துணை தலைவர் கொங்கன்குளம் பாலகிருஷ்ணன் மற்றும் பொதுமக்கள் அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரனுக்கு கோரிக்கை மனு அனுப்பி உள்ளனர்.

மேலும் செய்திகள்