கிராம மக்கள் திடீர் சாலை மறியல்
விருதுநகர் அருகே கிராம மக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
விருதுநகர்,
விருதுநகர் அருகே உள்ள மெட்டுகுண்டு கிராமத்தில் அருந்ததியர் காலனி கழிவுநீர் கால்வாய் தனியார் பட்டா நிலம் வழியாக செல்வதாக கூறி அடைத்துவிட்டனர். இதனால் கழிவுநீர் காலனி பகுதியில் தேங்கி நின்ற நிலையில் அப்பகுதி மக்கள் கழிவு நீரை வெளியேற்றி வந்தனர். ஆனாலும் சாலையில் தொடர்ந்து கழிவுநீர் தேங்கி வந்ததால் முறையான கழிவுநீர் கால்வாய் அமைத்து தருமாறு அதிகாரிகளிடம் முறையிட்டும் பலனில்லை. இந்நிலையில் நேற்று காலை திடீரென அப்பகுதி மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவலறிந்த சூலக்கரை போலீசார் மற்றும் பஞ்சாயத்து யூனியன் அதிகாரிகள் விரைந்து சென்று அவர்களை சமரசப்படுத்தி நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். இதனால் மறியல் போராட்டம் முடிவுக்கு வந்தது. எனினும் மறியல் போராட்டத்தால் பாலவனத்தம்- இருக்கன்குடி சாலையில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.