தீப்பெட்டி குடோனில் தீ விபத்து
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே தீப்பெட்டி குடோனில் தீவிபத்து ஏற்பட்டது.
ஸ்ரீவில்லிபுத்தூர்,
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள இனம்கரிசல்குளத்தை சேர்ந்தவர் கருப்பையா. இவருக்கு சொந்தமான தீப்பெட்டி தயாரிக்கும் தொழிற்சாலையில் உள்ள இரண்டு குடோனில் நேற்று இரவு திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த ஸ்ரீவில்லிபுத்தூர் தீயணைப்பு துறையினர் அந்தோணி, குருசாமி தலைமையில் ராஜபாளையம், தீயணைப்பு துறையினரும் இணைந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். நள்ளிரவு வரை இந்த பணி தொடர்ந்து நடைபெற்றது. இதுகுறித்து வன்னியம்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.