1,000 மரக்கன்றுகள் நடும் பணி
சிவகங்கையில் 1000 மரக்கன்றுகள் நடும் பணியை கலெக்டர் தொடங்கி வைத்தார்.
சிவகங்கை,
நிகழ்ச்சிக்கு கலெக்டர் மதுசூதன்ரெட்டி தலைமை தாங்கி நாற்று வளர்ப்பு பண்ணை அமைக்கும் பணியை தொடங்கி வைத்து பேசினார். பின்னர் ஒரே நேரத்தில் 1,000 மரக்கன்றுகள் நடப்பட்டன. இதை கலெக்டர் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் தோட்டக்கலைத்துறை துணை இயக்குனர் அழகுமலை, தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர்கள் .சக்திவேல், தர்மன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.