திருக்கோவிலூர் துணை மின்நிலையத்தில் மின்மாற்றி வெடித்தது
திருக்கோவிலூர் துணை மின்நிலையத்தில் மின்மாற்றி வெடித்தது 7 மணி நேர மின் தடையால் பொதுமக்கள் அவதி
திருக்கோவிலூர்
மின்மாற்றி வெடித்தது
திருக்கோவிலூரை அடுத்த சந்தைப்பேட்டையில் உள்ள துணை மின்நிலையத்தில் நேற்று அதிகாலை ஒரு மணி அளவில் திடீரென மின்மாற்றி வெடித்து தீப்பிடித்து எரிந்தது.
இதைப்பார்த்து துணை மின் நிலைய அலுவலர்கள் மற்றும் ஊழியர்கள் விரைந்து சென்று மின் வினியோகத்தை நிறுத்தி தீயை அணைத்தனர். இதுகுறித்து தகவலறிந்து வந்த மின் வாரிய அலுவலர்கள் மாற்று ஏற்பாடாக தியாக துருகம் பகுதியில் இருந்து திருக்கோவிலூருக்கு மின் விநியோகம் செய்தனர்.
7 மணி நேரம் மின்தடை
பின்னர் நேற்று காலை 10 மணிக்கு துணை மின் நிலையத்தில் பழுது நீக்கும் பணி தொடங்கி மதியம் 2 மணிக்கு முடிவடைந்தது. இதன் பிறகு துணை மின் நிலையத்தில் இருந்து மீ்ணடும் மின் வினியோகம் செய்யப்பட்டது. முன்னதாக துணை மின் நிலையத்தில் மின்மாற்றி வெடித்ததால் திருக்கோவிலூர் பகுதியில் சுமார் 7 மணி நேரம் மின் தடை ஏற்பட்டதால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்தனர்.