தொழிலாளி மீது தாக்குதல்

போடியில் தொழிலாளியை தாக்கிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2021-08-03 17:07 GMT
போடி: 


போடி முனீஸ்வரன் கோவில் தெருவை சேர்ந்தவர் ராஜூ. இவரது தம்பி சேதுமணி (வயது 52). கூலித்தொழிலாளி. இவருடைய தாய் ராசாத்தி. இவர்கள் வீட்டின் ஒரு பகுதியில் தனியாக வசித்து வந்தனர். 

அதே வீட்டில் மற்றொரு பகுதியில் ராஜூவின் மனைவி கலாவதி, மகன் தெய்வேந்திரன் (22), மகள் கீதாஞ்சலி ஆகியோர் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் ராஜூ கடந்த மாதம் இறந்தார். 30 நாட்கள் கழித்து சடங்குகள் செய்வதற்கு வீட்டுக்கு வெள்ளை அடிக்க வேண்டும் என கலாவதியிடம், ராசாத்தி கூறினார். 

\வீட்டை பங்கு பிரிக்காமல் வெள்ளை அடிக்க முடியாது என கலாவதி கூறினார். இதனால் சேதுமணிக்கும், அவர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. 

அதில் சேதுமணியை, தெய்வேந்திரன், கீதாஞ்சலி, கலாவதி ஆகியோர் சேர்ந்து தாக்கி, கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.

 படுகாயமடைந்த சேதுமணியை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக போடி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இதுகுறித்து சேதுமணி, போடி நகர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தெய்வேந்திரனை கைது செய்தனர்.

மேலும் செய்திகள்