கடந்த ஜூலை மாதத்தில் சென்னை மெட்ரோ ரெயிலில் 18½ லட்சம் பேர் பயணம்

சென்னை மெட்ரோ ரெயில் நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

Update: 2021-08-03 04:50 GMT
தமிழகத்தில் கொரோனா தொற்று கட்டுப்படுத்த ஊரடங்குக்கு பின்னர் கடந்த ஜூன் மாதம் 21-ந்தேதி முதல் 50 சதவீத இருக்கை வசதியுடன், சென்னையில் மீண்டும் மெட்ரோ ரெயில் சேவை தொடங்கியது. இதையடுத்து கடந்த ஜூன் மாதம் 21-ந்தேதி முதம் ஜூலை 31-ந்தேதி வரை 22 லட்சத்து 2 ஆயிரத்து 45 பேர் பயணம் மேற்கொண்டுள்ளனர்.

அந்த வகையில் கடந்த மாதம் (ஜூலை) 1-ந்தேதி முதல் 31-ந்தேதி வரை 18 லட்சத்து 46 ஆயிரத்து 466 பேர் மெட்ரோ ரெயில்களில் பயணம் மேற்கொண்டுள்ளனர். இதில் கியூ.ஆர். குறியீட்டு வசதி மூலம் 30 ஆயிரத்து 160 பேரும், பயண அட்டை மூலம் 10 லட்சத்து 6 ஆயிரத்து 615 பேரும் பயணம் மேற்கொண்டுள்ளனர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்