சிறுமியை கர்ப்பமாக்கிய வாலிபருக்கு 20 ஆண்டுகள் சிறை

சிறுமியை கர்ப்பமாக்கிய வாலிபருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சிக்கமகளூரு கோர்ட்டு தீர்ப்பு கூறியது.

Update: 2021-08-02 21:00 GMT
சிக்கமகளூரு: சிறுமியை கர்ப்பமாக்கிய வாலிபருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சிக்கமகளூரு கோர்ட்டு தீர்ப்பு கூறியது.

சிறுமி கர்ப்பம் 

சிக்கமகளூரு மாவட்டம் மூடிகெரே தாலுகா பனகல் கிராமத்தில் 16 வயது சிறுமி தனது பாட்டி வீட்டில் வசித்து வந்தாள். 

இந்த நிலையில் சிறுமிக்கும், சிக்கமகளூரு அருகே அல்லாம்புரா கிராமத்தை சேர்ந்த குருமூர்த்தி(வயது 23) என்ற வாலிபருக்கும் பழக்கம் உண்டானது. அந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. இருவரும் பல்வேறு இடங்களுக்கு சென்று தங்களது காதலை வளர்த்து வந்தனர். இந்த நிலையில் திருமண ஆசைக்காட்டி சிறுமியிடம், குருமூர்த்தி உல்லாசம் அனுபவித்து வந்து உள்ளார். இதனால் அந்த சிறுமி கர்ப்பம் அடைந்தாள். 

20 ஆண்டுகள் சிறை

இதுபற்றி அறிந்த சிறுமியின் பெற்றோர் குருமூர்த்தி மீது பனகல் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் குருமூர்த்தியை கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் அவர் மீது சிக்கமகளூரு கோர்ட்டில் வழக்கும் தொடரப்பட்டது.

குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து வழக்கு விசாரணை முடிந்த நிலையில் நேற்று நீதிபதி தீர்ப்பு கூறினார். அதில் குருமூர்த்திக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.50 ஆயிரம் அபராதம் விதித்தும் நீதிபதி வினுதா உத்தரவிட்டார். அபராதம் ரூ.50 ஆயிரத்தை பாதிக்கப்பட்ட சிறுமிக்கு வழங்க வேண்டும் என்றும் நீதிபதி தனது தீர்ப்பில் கூறினார். இதையடுத்து குருமூர்த்தியை போலீசார் பலத்த பாதுகாப்புடன் அழைத்து சென்று சிறையில் அடைத்தனர்.

மேலும் செய்திகள்