வீடு புகுந்து நகை, பணம் கொள்ளை
வீடு புகுந்து நகை, பணம் கொள்ளையடித்த ஆசாமிகளை போலீசார் தேடி வருகின்றனர்.
புதூர்,ஆக
மதுரை கருப்பாயூரணி போலீஸ் சரகம் காமதேனு நகரைச் சேர்ந்தவர் முத்துராஜா (வயது 45). இவர் வீட்டை பூட்டி விட்டு வெளியே சென்றிருந்ததை நோட்டமிட்ட மர்ம நபர்கள் வீடு புகுந்து பீரோவில் இருந்த 2 பவுன் சங்கிலி, ரூ.9,500 ஆகிய வற்றை திருடிச்சென்று விட்டனர். இது குறித்த புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.