கொரோனாவுக்கு 2 பேர் பலி

கொரோனாவுக்கு 2 பேர் பலியாகினர்

Update: 2021-08-02 20:07 GMT
திருச்சி
திருச்சி மாவட்டத்தில் நேற்று 75 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதியானது. அந்தவகையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை 72,567 ஆக அதிகரித்துள்ளது. ஏற்கனவே கொரோனா நோயால் அனுமதிக்கப்பட்டிருந்த 88 பேர் நேற்று குணமடைந்ததால் அவர்கள் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். அதன்படி குணமடைந்தோர் எண்ணிக்கை 70,899 ஆக அதிகரித்தது. ஆனால் கொரோனாவுக்கு நேற்று திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்ற  2 பேர் உயிரிழந்தனர். இதன்மூலம் உயிரிழந்தோர் எண்ணிக்கை 968 ஆக அதிகரித்து உள்ளது. தற்போதைய நிலவரப்படி தொடர் சிகிச்சையில் 700 பேர் உள்ளனர்.

மேலும் செய்திகள்