ஆடி கிருத்திகையையொட்டி முருகன் கோவில்களில் சிறப்பு பூஜை

ஆடி கிருத்திகையையொட்டி முருகன் கோவில்களில் சிறப்பு பூஜை நடந்தது. அனுமதி மறுக்கப்பட்டதால் பக்தர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

Update: 2021-08-02 18:39 GMT
கரூர்
பூஜைகள்
கொரோனா பரவல் காரணமாக கரூர் மாவட்டத்தில் நேற்று, இன்று (செவ்வாய்க்கிழமை) வரை கோவில்களில் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டு ஆகம விதிகளின் படி பூஜை நடைபெற அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்தநிலையில் நேற்று ஆடி கிருத்திகையொட்டி கரூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து முருகன் கோவில்களில் ஆகம விதிகளின் படி பூஜை மட்டும் நடைபெற்றது. இதில் முருகப்பெருமானுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தன. 
பக்தர்கள் ஏமாற்றம்
கரூர் வெண்ணைமலை பாலசுப்பிரமணிய சுவாமிக்கு நேற்று சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூஜை நடந்தது. இதனால் சாமி தரிசனம் செய்யலாம் என எண்ணி வந்திருந்த பக்தர்களுக்கு அனுமதி மறுத்தப்பட்டதால் ஏமாற்றம் அடைந்தனர். இதையடுத்து அவர்கள் கோவில் முன்பு சூடம் ஏற்றி வழிபட்டு சென்றனர்.

மேலும் செய்திகள்