ராமநாதபுரம்
ராமநாதபுரம் பஜார் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சிவஞானபாண்டியன் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ராமநாதபுரம் அலங்கச்சேரி தெரு பகுதியில் சந்தேகத்திற்கு இடமான முறையில் நின்று கொண்டிருந்தவரை பிடித்து சோதனையிட்டனர். அவரிடம் அரசால் தடை செய்யப்பட்ட வெளி மாநில லாட்டரி சீட்டுகள் இருந்தது. இதையடுத்து ரூ.910 மதிப்பிலான லாட்டரி சீட்டுகளையும், ரூ.480 ஆகியவற்றை கைப்பற்றினர். இதுதொடர்பாக கொத்தனார் தெருவை சேர்ந்த கோபாலகிருஷ்ணன்(வயது 52) என்பவரை கைது செய்தனர்.