2-ம் நிலை காவலர் உடற்தகுதி தேர்வு: போலீஸ் ஐ.ஜி. மல்லிகா ஆய்வு

2-ம் நிலை காவலர் உடற்தகுதி தேர்வு: போலீஸ் ஐ.ஜி. மல்லிகா ஆய்வு

Update: 2021-08-02 17:45 GMT
புதுக்கோட்டை, ஆக.3-
புதுக்கோட்டை ஆயுதப்படை மைதானத்தில் தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் மூலம் நடத்தப்படும் 2-ம் நிலை காவலர் உடற்தகுதி தேர்வில் நேற்று பெண் தேர்வர்களுக்கு தேர்வு நடைபெற்றது. இதில் புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களை சேர்ந்த பெண் தேர்வர்கள் 348 பேர் பங்கேற்றனர். இதில் 230 பேர் தேர்வாகினர். தேர்வு நடைபெற்றதை கண்காணிப்பு அதிகாரியான ஐ.ஜி. மல்லிகா நேற்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு நிஷா பார்த்திபன் உடன் இருந்தார்.

மேலும் செய்திகள்