ஜோலார்பேட்டை அருகே 4 டன் ரேஷன் அரிசி பறிமுதல்

ஜோலார்பேட்டை அருகே 4 டன் ரேஷன் அரிசி பறிமுதல்

Update: 2021-08-02 17:13 GMT
ஜோலார்பேட்டை

ஜோலார்பேட்டையை அடுத்த தாமலேரிமுத்தூர் பகுதியை சேர்ந்த மோகன் என்பவரின் வீட்டில் ரேஷன் அரிசி பதுக்கிவைத்து வெளிமாநிலத்திற்கு மினி வேன் மூலம் கடத்துவதாக திருப்பத்தூர் மாவட்ட வழங்கல் அலுவலர் விஜயனுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. தகவலின்பேரில் வட்ட வழங்கல் அலுவலர் கண்ணனுடன் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனார். அப்போது, அங்கு மினி வேனில் 3 டன் ரேஷன் அரிசி வெளி மாநிலத்திற்கு கடத்த தயார் நிலையில் இருந்ததை கைப்பற்றினர். மேலும் மோகன் என்பவரின் வீட்டின் பூட்டை கிராம நிர்வாக அலுவலர் மணிகண்டன் முன்னிலையில் உடைத்து சோதனை செய்ததில் வீட்டில் ஒரு டன் ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டு இருப்பது தெரிய வந்தது. அதையும் கைப்பற்றினர். 

அரிசி, கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட மினிவேன் மற்றும் இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்து வேலூர் நுகர்பொருள் வாணிப கிடங்கில் ஒப்படைத்தனர். திருப்பத்தூர் மாவட்ட பறக்கும் படை தாசில்தார் சம்பத், வருவாய் ஆய்வாளர் சிலம்பரசன் ஆகியோர் உடன் இருந்தனர். 



மேலும் செய்திகள்