விழுப்புரத்தில் கொரோனா நோய் தடுப்பு குறித்து பொதுமக்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி
விழுப்புரத்தில் நடந்த கொரோனா தடுப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சியை கலெக்டர் தொடங்கி வைத்தார்.
விழுப்புரம்,
விழுப்புரம் புதிய பஸ் நிலையத்தில் கொரோனா வைரஸ் நோய் தடுப்பு வழிமுறைகள் குறித்து பொதுமக்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று காலை நடைபெற்றது. நிகழ்ச்சியை மாவட்ட கலெக்டர் டி.மோகன் தொடங்கி வைத்தார்.
தொடர்ந்து, கலெக்டர் டி.மோகன் தலைமையில், கொரோனா பாதுகாப்பு விழிப்புணர்வு உறுதிமொழியை அரசுத்துறை அலுவலர்கள், பொதுமக்கள் எடுத்துக்கொண்டனர்.
தொடர்ந்து நாட்டுப்புற கலைஞர்கள் மூலம் பஸ் நிலைய பயணிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கொரோனா பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
இந்நிகழ்ச்சி முடிந்ததும் பொதுமக்களுக்கு முக கவசம், கபசுர குடிநீர், விழிப்புணர்வு துண்டு பிரசுரம் ஆகியவற்றை கலெக்டர் டி.மோகன் வழங்கினார்.
அதன் பிறகு கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத்துறை சார்பில் கை கழுவுதல், முக கவசம் அணிதல் குறித்த செயல்முறை விளக்க நிகழ்ச்சி கலெக்டர் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிகளில் மாவட்ட வருவாய் அலுவலர் ராஜசேகரன், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கிருஷ்ணப்பிரியா, விழுப்புரம் கோட்டாட்சியர் ஹரிதாஸ், மாவட்ட கல்வி அலுவலர் கிருஷ்ணன், உதவி கலெக்டர் (பயிற்சி) ரூபினா, சுகாதார பணிகள் துணை இயக்குனர் டாக்டர் செந்தில்குமார், தாசில்தார் வெங்கடசுப்பிரமணியன், விழுப்புரம் துணை போலீஸ் சூப்பிரண்டு பழனிச்சாமி, நகராட்சி நகர்நல அலுவலர் பாலசுப்பிரமணியன், நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் ராஜசேகர், இளம் செஞ்சிலுவை சங்க ஒருங்கிணைப்பாளர் பாபுசெல்வத்துரை, தேசிய மாணவர் படை தலைவர் ரத்தினமணி, சாரண இயக்க தலைவர் மணி, பசுமைப்படை ஒருங்கிணைப்பாளர் சரவணன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.