காஞ்சீபுரம் காமாட்சியம்மன் கோவிலில் பக்தர்கள் தரிசனத்துக்கு இன்றும், நாளையும் தடை

காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆர்த்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

Update: 2021-08-02 05:52 GMT
தமிழ்நாடு முழுவதும் கொரோனா தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கைகள் காரணமாக பல்வேறு தளர்வுகளுடன் ஊரடங்கு உத்தரவு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. கோவில்்களில் திருவிழாக்கள், ஊர்வலங்கள் நடத்தக்கூடாது என்றும் அன்றாடம் நடைபெறும், பூஜைகளுடன் பொதுமக்கள் சாமி தரிசனம் செய்வதற்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது,

இந்த நிலையில் தற்போது ஆடித்திருவிழாவையொட்டி கோவில்களில் அதிக அளவு பக்தர்கள் வருகை புரிவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது, இதன் காரணமாக கொரோனா தொற்று பரவல் மீண்டும் அதிகரிக்கக்கூடும் என்ற அச்சம் காரணமாக பொதுமக்கள் மற்றும் பக்தர்களின் நலன் கருதி காஞ்சீபுரம் காமாட்சியம்மன் கோவில், ஏகாம்பரநார் கோவில், கச்சபேஸ்வரர் கோவில், வரதராஜ பெருமாள் கோவில், வழக்கறுத்தீஸ்வரர் கோவில் மற்றும் காஞ்சீபுரம் மாவட்டத்தில் உள்ள முருகன் கோவில்களில் இன்று (திங்கட்கிழமை), நாளை (செவ்வாய்கிழமை) பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.் ஆகம விதிகளின்படி சாமி அலங்காரங்கள், பூஜை புனஸ்காரங்கள் அர்ச்சகர்கள் மூலம் தொடர்ந்து நடைபெறும்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்