மங்களபுரம் அருகே நாட்டுத்துப்பாக்கி வைத்திருந்த விவசாயி கைது

மங்களபுரம் அருகே நாட்டுத்துப்பாக்கி வைத்திருந்த விவசாயி கைது

Update: 2021-08-01 22:43 GMT
ராசிபுரம்:
ராசிபுரம் தாலுகா மங்களபுரம் போலீஸ் சரகம் தாண்டாக்கவுண்டம்பாளையம் உரம்பு வண்ணான்காடு பகுதியில் மங்களபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மணி மற்றும் போலீசார் ரோந்து சென்றனர். அப்போது அவர்களுக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் உரம்பு வண்ணான் காட்டில் உள்ள விவசாயி கருப்பண்ணன் (வயது 42) என்பவரின் வீட்டை சோதனையிட்டனர்.  அப்போது கருப்பண்ணன் அவரது வீட்டின் பின்புறம் உள்ள விறகு பட்டறையில் அனுமதி இல்லாமல் நாட்டுத்துப்பாக்கியை வைத்திருந்ததை கண்டுபிடித்தனர். இதைத்தொடர்ந்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மணி கருப்பண்ணன் மீது வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தார். மேலும் அவரிடம் இருந்து நாட்டுத்துப்பாக்கியும் பறிமுதல் செய்யப்பட்டது.

மேலும் செய்திகள்